கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகே எம்.சி.பள்ளி கிராமத்தில், ஊருக்கு பொதுவான இடத்தில் பழமையான கட்டிடம் உள்ளது. இதை இடிக்கும் பணி நேற்று நடந்தது. இதில் எம்.சி.பள்ளி காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் அண்ணாமலை(65) மற்றும் ரவி(51) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை, கட்டிடத்தின் அடிப்பகுதியில் கடப்பாரையால் குத்தி இடிக்கும் போது, எதிர்பாராதவிதமாக பழமையான சுவர் இடிந்து அண்ணாமலை, ரவி ஆகியோர் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த மகராஜகடை போலீசார், இருவரது சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post சுவர் இடிந்து தொழிலாளர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.