×
Saravana Stores

பதவி வெறியில் கட்சியை கபளீகரம் செய்த எடப்பாடியுடன் இணையும் கேள்விக்கே இடமில்லை: டிடிவி.தினகரன் பேட்டி

திருச்சி: காமராஜர் பிறந்தநாளையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி : அதிமுக பொது செயலாளர் பதவிக்கு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்று தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அங்கு எந்த தேர்தலும் நடக்கவில்லை. அது நியமனம் தான்.

ஒரு சுயநல நபரிடம், பதவி வெறி, துரோக சிந்தனை உள்ளவரிடம் அதிமுக இன்று மாட்டி கொண்டிருக்கும்போது அந்த கட்சியில் நாங்கள் இணைவோம் என கேட்கிற கேள்வியே தவறு. தூங்குவதுபோல் நடிப்பவர்கள், சுயநலத்தில் இருப்பவர், பதவி வெறி பிடித்தவர், பணத்திமிரில் இருப்பவர், கட்சியை கபளீகரம் செய்து வைத்திருப்பவர் திருந்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. எங்களுடைய லட்சிய பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பதவி வெறியில் கட்சியை கபளீகரம் செய்த எடப்பாடியுடன் இணையும் கேள்விக்கே இடமில்லை: டிடிவி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,DTV.Thinakaran ,Tiruchi ,Kamaraj ,AAMU ,General Secretary ,DTV ,Dinakaran ,Trichy Chatram Bus Station ,MGR ,Jayalalithaa ,AIADMK ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!!