×
Saravana Stores

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 52 சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தான் காரணம்.

நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் அறிவித்த புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்றவற்றால் உயர் கல்வியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும். அதன்பிறகு 29ம் தேதி பொது கலந்தாய்வு நடத்தப்படும். செப்.11-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது உயர் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் வீரராகவ ராவ் உடன் இருந்தனர்.

The post புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pudhufuhren ,Tamil Puduthalvan ,Minister ,Ponmudi ,Chennai ,Higher Education ,Chennai Chief Secretariat ,India ,Nadu ,Minister Ponmudi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...