×
Saravana Stores

பஸ்கள் மோதல் மாணவர்கள் உள்பட 95 பேர் காயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் நிலையத்தில், நேற்று மாலை 5.30 மணிக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் மாரண்டஅள்ளி புறப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதே போல், ஓசூரில் இருந்து பாலக்கோடு வழியாக தர்மபுரிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரு பஸ்களும் பாலக்கோடு அடுத்துள்ள கோடியூர் கிராமம் அருகே வந்தபோது, திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இரு பஸ்சிலும் பயணித்த 95க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

The post பஸ்கள் மோதல் மாணவர்கள் உள்பட 95 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Palakodu bus station ,Dharmapuri district ,Marandaalli ,Hosur ,Dinakaran ,
× RELATED கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி