×
Saravana Stores

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குழந்தைகள் தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு விருது: வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி மேடை

லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குழந்தைகள் தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணமயமாக நடைபெற்றது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2024ம் ஆண்டுக்கான கருத்துகளை பெற்று அவர்கள் விரும்பிய திரைப்படங்கள் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான ஸ்பான்ச் பாக் மற்றும் பாட்ரிக் ஸ்டார் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

மோஷன் கேப்ச்சர் உதவியுடன் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளை கவரும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு வண்ணமயமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறந்த படத்திற்கான விருது பார்பிக்கு வழங்கப்பட்டது. வாங்கா படத்தில் நடித்த டிமோட்டிக்கு சிறந்த நடிகர் விருதும் பார்பீ படத்திற்காக மார்கரெட் ராபிக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை ஸ்பைடர் மேன் ஆக்ராஸ் தி ஸ்பைடர் திரைப்படம் பெற்றது.

விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது வண்ணக்கலவை நீர் ஊற்றப்பட்டதால் குழந்தைகள் உற்சாகமாக கூச்சலிட்டனர். தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு டென்னிஸ் ஜாம்பவான் செரினா வில்லியம்ஸ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தன்னால் சாதிக்கமுடியும் என்றால் அனைவராலும் சாதிக்க முடியும் என்று அவர் குழந்தைகள் மத்தியில் பேசினார்.

The post லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குழந்தைகள் தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு விருது: வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி மேடை appeared first on Dinakaran.

Tags : Los Angeles ,United States ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் பரபரப்பு 3வது முறையாக...