×
Saravana Stores

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம்: 4 தனிப்படைகள் அமைப்பு

கடலூர்: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன்குமார் (40). இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை இவரது வீட்டிற்குள் சுதன் குமார்.

அவரது தாயார் கமலேஸ்வரி (65) மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய 3 பேரை கொலை செய்து ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக, நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம்: 4 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Suthankumar ,Karamani Kuppam ,Hyderabad, Telangana ,Dinakaran ,
× RELATED கடலூரில் அருந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி நாய்கள் பலி...