×
Saravana Stores

ஜெயலலிதா வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம், புலன் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. தீர்க்கப்படாத சந்தேகங்கள் உள்ளன என மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஜெயலலிதா வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu government ,CBI ,Jayalalithaa ,Arumugasamy Commission ,Dinakaran ,
× RELATED சபாநாயகர் அப்பாவு மீது சிறப்பு...