சென்னை: தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,084 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால் 1 மாதத்துக்கு பிறகு மீண்டும் 4,000 மெகாவாட்டிற்கு மேல் காற்றாலை மின் உற்பத்தி. கடந்த ஒரு மாதமாக 3,000 மெகாவாட்டுக்கும் கீழ் மின் உற்பத்தியான நிலையில் இன்று 4,084 மெகாவாட் மின் உற்பத்தி. மே முதல் அக். வரை சீசன் காலகட்டத்தில் 5,000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யபடும். தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.
The post தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 4,084 மெகாவாட்டாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.