×
Saravana Stores

“கஜானா தன்வசம் கரன்சி தொடாத கரம்” :காமராஜருக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம்

சென்னை : “கஜானா தன்வசம் கரன்சி தொடாத கரம்” என்று கவிதை பாணியில் காமராஜருக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்துகின்றனர். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதனிடையே கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

துறவிபோல் ஒரு வாழ்வு
பொதுநலம் துறவாத தொண்டு

கஜானா தன்வசம்
கரன்சி தொடாத கரம்

இலவசமாய் வழங்கியவை
வேட்டி சேலைகள் அல்ல
பதவிகள்

கட்டாந் தரையில்
கல்விப் பயிர் வளர்த்த
நல்லேர் உழவன்

எல்லா மழையும் பூமிக்கே
சிறுதுளி நீரையும்
சேமிப்பதில்லை வானம்

காமராஜர் வானம்

தோழர்களே!
காமராஜர் ஆட்சி அமைப்போம்
நல்ல முழக்கம்தான்

காமராஜர் ஆவோம் என்பது
அதனினும்
நல்ல திட்டம் அல்லவா?

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “கஜானா தன்வசம் கரன்சி தொடாத கரம்” :காமராஜருக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,Kamaraja ,Chennai ,Gazana Dhanvasam Karansi Thotha Karam ,Perunthalaivar ,Kamaraj ,Government of Tamil Nadu ,Chief Minister ,
× RELATED நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கவிதாஞ்சலி