×
Saravana Stores

காவிரி ஆற்றில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000லிருந்து 4,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு விநாடிக்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக நேற்று முன் தினம் காவிரி ஆற்றில் 21,047 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன் தினம் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை தமிழக எல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை வழங்காமல், மழையால் உபரிநீரை கர்நாடகா திறப்பதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

The post காவிரி ஆற்றில் நீர்வரத்து 4,500 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Kaviri River ,Tamil Nadu ,Karnataka government ,
× RELATED ஒகேனக்கலில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி