நியூஇங்கிலாந்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நியூஇங்கிலாந்து: நியூஇங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பிப்ரவரி 3ம் தேதி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் உட்பட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்னிமா கலந்து கொண்டனர். மேலும் விழாவில் குடும்ப வாழ்வில் எது அதிக ஆனந்தம்? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி விருந்து பரிமாறப்பட்டது.

Related Stories: