- திருநாவுகரசர் பிறந்தநாள் விழா
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- வீரபாண்டியன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருநாவுக்கரசர்
- அரும்பக்கம் அம்மன் கோயில்
- திருநாவுகரசர் பிறந்தநாள் விழா
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் 75வது பவள விழா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அரும்பாக்கம் அம்மன் கோயில் பழைய பஸ் நிலையம் அருகில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட விழா நடந்தது. விழாவிற்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க வீரபாண்டியன் தலைமை தாங்கினார். விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.எம்.ஆரூண் கலந்து கொண்டு பிறந்தநாள் கேக்கை வெட்டினார்.
மேலும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். மேலும் அனைவருக்கும் வெஜிடபுள் பிரியாணி, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் கணபதி, ஜி.வாஞ்சிநாதன், எஸ்.எம்.கமல் மாநிலச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.கார்த்திகேயன், முன்னாள் வட்டத் தலைவர் வில்சன் நிர்வாகிகள் சரவணன், வின்சென்ட், மாநில நிர்வாகி லட்சுமி, கரன் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிறந்தநாளை முன்னிட்டு அரும்பாக்கம் க.வீரபாண்டியன் ஏற்பாட்டில், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
The post திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா; ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவி: காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.