×
Saravana Stores

திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பியோடிய நிலையில், போலீசார் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் மறைந்திருந்த திருவேங்கடத்தை போலீசார் பிடிக்க முயன்றனர். கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவல்துறையை நோக்கி சுட்டதால் என்கவுன்டர் நடத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக சுட்டதில் காயமடைந்த திருவேங்கடம், மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

The post திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruvengadam ,Chennai ,Armstrong ,Vegetarian Village ,
× RELATED லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு...