×

நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

ஹனோய்: வியட்நாம் நாட்டின் வடக்கு மாகாணமான ஹா ஜியாங்கில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாக் மீ என்ற இடத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற மினி பேருந்து நிலச்சரிவில் சிக்கியது. இந்த சம்பவத்தில் மினி பேருந்தில் இருந்த 16 பேரில் 11 பேர் பலியாகினர். மற்றவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி பலியான 11 பேரும், மண்ணோடு மண்ணாக புதைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Hanoi ,Vietnam ,Ha Giang ,Bac Mee ,Dinakaran ,
× RELATED ஆள் கடத்தல், சித்திரவதை வழக்கில்...