×
Saravana Stores

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி


டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்கு விலக்கு கோருவது பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஜூன் 28இல் முதல்வர் எழுதிய கடிதத்திற்கு ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,K. ,Rahul Gandhi ,Stalin ,Delhi ,Chief Minister MLA ,MLA ,NEET ,Chief Minister K. ,
× RELATED முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வனின்...