சென்னை: சென்னை போரூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்பாவில் இருந்து 6 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஐயப்பன்தாங்கலில் உள்ள பிரஸ்டீஜ் என்ற ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்பாவுக்கு சென்ற போலீஸ் அங்கிருந்த 6 இளம்பெண்களை மீட்டது. மீட்கப்பட்ட 6 பெண்களும் காப்பகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தினேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.
The post சட்டவிரோதமாக செயல்பட்ட ஸ்பாவில் இருந்து 6 இளம் பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.