- ராஜபாளையம் மகளிர் கல்லூரி
- ராஜபாளையம்
- காஸ்மோஸ் அறிவியல்
- தர்மராஜா கல்லூரிக்கு
- பெண்கள்
- ராஜபாளையம் தர்மராஜா பெண்கள் கல்லூரி
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் துறை
ராஜபாளையம், ஜூலை 14: ராஜபாளையம் தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் கருத்தரங்கு மற்றும் சிறப்புரை நடைபெற்றது. ராஜபாளையம் தர்மராஜா பெண்கள் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கு மற்றும் சிறப்புரை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆராய்ச்சி மாணவி ராஷாஷனாஸ் கலந்து கொண்டு பிரபஞ்ச அதிசயங்கள் குறித்த பல்வேறு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை பற்றி விளக்கினார்.
கல்லூரி படிப்பை முடிக்கும்போது அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தவறுகள் மூலம் தன்னைத் திருத்திகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர் ஜமுனா சிறப்பு விருந்தினரை கவுரவபடுத்தினார். மாணவ துணைத் தலைவி பொன். சுவேதா வரவேற்றார். மாணவ தலைவி ஸ்ரீ ராஜலக்ஷ்மி சிறப்பு விருந்தினர் அறிமுக உரையாற்றினார். மாணவச் செயலர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார் .
The post ராஜபாளையம் மகளிர் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் சிறப்புரை appeared first on Dinakaran.