×
Saravana Stores

குற்ற சம்பவங்களை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய இளைஞர்கள்

 

திருச்சுழி, ஜூலை 14: நரிக்குடி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க இளைஞர்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் பக்கத்து மாவட்டமான ராமநாதபுரத்திற்கு தப்பி விடுகின்றனர். இந்த நிலையில் குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, நரிக்குடி அருகே உள்ள எஸ்.வல்லக்குளம் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து ரூ.50 ஆயிரம் வசூல் செய்து தங்களது கிராமத்தில் சொந்த செலவில் 7 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். இளைஞர்களின் இந்த நடவடிக்கையை நரிக்குடி இன்ஸ்பெக்டர் சிவபாலன் பாராட்டினார். அப்போது நரிக்குடி, வீரசோழன் எஸ்எஸ்ஐக்கள், போலீசார் உடனிருந்தனர்.

The post குற்ற சம்பவங்களை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Narikudi ,Virudhunagar district ,Ramanathapuram ,
× RELATED மனைவியை பிரிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை