×
Saravana Stores

மஞ்சுவிரட்டு அனுமதி கலெக்டர் பரிசீலிக்க உத்தரவு

 

மதுரை, ஜூலை 14: சிவகங்கை மாவட்டம் பொய்யலூர் பகுதியை சேர்ந்த சரவணன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம் பொய்யலூரில் அமைந்துள்ள ஸ்ரீகரியமாணிக்கம் பெருமாள்கோவில், ஆதினமிளகி அய்யனார் கோவில், உள்ளிட்ட கோவில் ஆடித்திருவிழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜூலை 24 ம் தேதி மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியளித்தும் அதனை அரசாணையில் வௌியிடுவதற்கும் ஐகோர்ட் உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஸ்குமார், ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட கலெக்டர் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.

The post மஞ்சுவிரட்டு அனுமதி கலெக்டர் பரிசீலிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Manchuviratu Permit Collector ,Madurai ,Saravanan ,Poiyalur, Sivagangai District ,Srikariyamanickam Perumal temple ,Adhinamilaki Ayyanar temple ,Manchuviratu ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!