×
Saravana Stores

நைஜீரியாவில் பள்ளி இடிந்து 22 மாணவர்கள் பலி

அபுஜா: நைஜீரியாவில் இரண்டு மாடி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது 22 மாணவர்கள் பலியாகி உள்ளனர். நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் அமைந்துள்ள செயின்ட்ஸ் அகாடமி கல்லூரியின் 2 மாடி கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த 154 மாணவர்கள் சிக்கினார்கள்.

இவர்கள் அனைவரும் 15வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள். அனைவரும் பள்ளியில் பரீட்சை எழுதிவந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது.இதையடுத்து 132 பேர் மீட்கப்பட்டனர். இந்த கட்டிட விபத்தில் 22 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post நைஜீரியாவில் பள்ளி இடிந்து 22 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Nigeria ,Abuja ,Saints Academy College ,Plateau State, Nigeria ,Dinakaran ,
× RELATED நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழப்பு