- கர்நாடக
- சென்னை
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்
- தமிழ்நாடு
- காவிரி ஒழுங்குமுறைக் குழு
- கர்நாடகா 1 டி.எம்.சி
- தின மலர்
சென்னை: கர்நாடகா தினமும் 1 டிஎம்சி தண்ணீரை அளிக்க தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் கர்நாடக முதல்வருடன் பேசி, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது அடாவடித்தனமானது; கண்டனத்துக்குரியது. விசிக தலைவர் திருமாவளவன்: தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்த உத்தரவின்படி ஜூலை 31ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டிஎம்சி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்.
The post கர்நாடகா தினமும் 1 டிஎம்சி நீர் தர தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.