×
Saravana Stores

டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: சில்லரை மதுபானம் விற்பனையில் ஒரு நாள் ஒன்றுக்கு, ஒருவருக்கு எவ்வளவு முறை, எத்தனை மதுபானங்கள் விற்கலாம் என்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் புறப்பட்டு, தலைமைச் செயலகம் சென்று, முதல்வரிடம் முறையிடுவது என்ற இயக்கம் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளை கடந்த 10ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை அமைச்சர் முன்னிலையில் பேசி தீர்க்கலாம் என்றார். இதை ஏற்று, முதல்வரிடம் முறையிடும் இயக்கம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Chennai ,Tamil Nadu ,AIDUC ,TASMAC Employees Association ,
× RELATED டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு