×
Saravana Stores

மின்கம்பி அறுந்து விழுந்து 8 செம்மறி ஆடுகள் பலி

பாடாலூர்: பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகாவில் திடீர் மழை மற்றும் சூறாவளிக் காற்றால் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 செம்மறி ஆடுகள் இறந்தன. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் கண்ணன் (45). இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் சுற்றியுள்ள கிராமங்களில் இவருக்கு சொந்தமாக சுமார் 200 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று மாலை கொளக்காநத்தம் கிராமத்தில் திடீரென மழை பெய்தது.

சூறாவளிக் காற்றும் வீசியதால் அவர்கள் ஆடுகளை அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் புண்ணியமூர்த்தி வயலுக்கு விரைவாக ஆடுகளை ஓட்டிச் சென்றனர். அந்த வேளையில் பச்சையம்மன் காட்டு கோயில் அருகே மின்கம்பி அறுந்து தரையில் விழுந்து கிடந்ததை அறியாத ஆடுகள் ஒன்றும் பின் ஒன்றாகச் சென்றன. இதில், மின்சாரம் தாக்கி 8 செம்மறி ஆடுகளும் நிகழ்விடத்திலே இறந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் மருவத்தூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

The post மின்கம்பி அறுந்து விழுந்து 8 செம்மறி ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : RAIN ,PERAMBALUR ALATHUR TALUKA ,Karupusamy ,Kannan ,Selvanayakapuram ,Mudukulathur Taluga Selvanayakapuram, Ramanathapuram District ,PERAMBALUR DISTRICT ,
× RELATED கோபி அருகே எல்லப்பாளையத்தில் மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி