×
Saravana Stores

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்கு பெட்டி போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

வேட்பாளர்கள், முகவர்கள் போலீஸ் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 14 மேஜைகளில் 20 சுற்றுகளாக எண்ணி முடிக்கப்படுகிறது. ஒவ்வொரு மேதைக்கும் ஒரு மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர், உதவியாளர், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஒரு கிராம நிர்வாக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,CHENNAI ,
× RELATED ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேச்சு;...