×
Saravana Stores

திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள்

 

திருச்சி, ஜூலை 13: திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் பணி புரியும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அண்ணா நகர் கிளையில் திருச்சி மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுக்கள் மூலம் சமர்ப்பித்து அத்தகைய மனுக்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பெறப்பட்ட அனைத்து மனுக்களும் இரண்டு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர், செயலாட்சியர், அரசு பொது மேலாளர் முருகன், திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

The post திருச்சி அண்ணா நகர் கிளையில் கூட்டுறவு துறை பணியாளர் நாள் appeared first on Dinakaran.

Tags : Cooperative Department Staff Day ,Trichy Anna Nagar Branch ,Trichy ,Trichy district ,Central Cooperative Bank ,Anna Nagar ,Zonal ,Liaison Officer ,Jayaraman ,Dinakaran ,
× RELATED தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி...