×
Saravana Stores

தென்குவளவேலி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த தின ஓவியப்போட்டி

 

வலங்கைமான், ஜூலை 13: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தின போட்டிகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் காமராசர் பிறந்த தினமான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

இதுகுறித்து பள்ளியின் தலைமைஆசிரியர்சூரியகுமார்(பொ) கூறியதாவது; ஆண்டுதோறும் எங்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது வழக்கம்போல் இந்த ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மூலம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது மேலும் அன்று மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என்றார்.

The post தென்குவளவேலி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த தின ஓவியப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Kamaraj Birthday Painting Competition ,Tenkuvalaveli Government School ,Valangaiman ,Kamaraj ,Thiruvarur District ,Valangaiman Union Tenkuvalaveli Government High School ,Thenkuvalaveli Government School ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவர்களிடம் டிஎன்பிஎஸ்சி விழிப்புணர்வு