- திருவாரூர்
- ரமேஷ் குமார்
- ஆண்டிபாளையம், திருவாரூர் தாலுக்கா
- திருவாரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
- நன்னிலம்
திருவாரூர், ஜூலை 13: திருவாரூர் தாலுக்கா ஆண்டிபாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (58) என்பவர் பாண்டி சாராயத்தை விற்பனை செய்ததாக கடந்த மாதம் 21ம் தேதி திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு நன்னிலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் இதேபோன்று தொடர்ந்து பாண்டி சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை நேற்று கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். போலீசார் மூலம் நன்னிலம் கிளை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறையில் ரமேஷ்குமார் அடைக்கப்பட்டார்.
The post பிரபல சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.