×
Saravana Stores

முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம்

 

தஞ்சாவூர், ஜூலை 13: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது/ தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். இதில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 32 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.1,60,000 மதிப்பில் கல்வி உதவித்திகையை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்த 82 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் சரவணன் (ஓய்வு). கண்காணிப்பாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முன்னாள் படைவீரர்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Camp ,Thanjavur ,Grievance ,Thanjavur District Collectorate Office ,Thanjavur District ,Collector ,Deepak Jacob ,Grievance Camp ,Dinakaran ,
× RELATED குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்...