- தஞ்சாவூர்
- கோட்டாங்குடி ஊராட்சி
- தஞ்சாவூர் மாவட்டம்
- பாபனாசம் தலுகா
- அம்மாபேட்டை ஒன்றியம்
- கொத்தங்குடி ஓராட்சி
- ஓரடாச்சி
தஞ்சாவூர், ஜூலை 13: கொத்தங்குடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கு உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. ஒன்றிய உதவி பொறியாளர் கதிரேசன் மற்றும் பணி மேற்பார்வையாளர் ராபின்தாமஸ் ஆகியோர் வீடு கட்டுவதற்கான அளவீடு செய்து வரவு செய்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி மற்றும் பயனாளிகள் இருந்தனர்.
The post கலைஞரின் கனவு இல்ல திட்ட தொடக்க விழா appeared first on Dinakaran.