×
Saravana Stores

பெரம்பலூர் நகராட்சி வார்டு எண் 5ல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

 

பெரம்பலூர், ஜூலை 13: பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 5-ல் உள்ள ஆக்கிரமிப்புகள் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் மற்றும் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம் பிகா ராஜேந்திரன் அறிவு றுத்தலின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. பெரம்ப லூர் ரோவர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் தலைமை யில் பெரம்பலூர் தாசில் தார் சரவணன் முன்னிலையில் ஜேசிபி மற்றும் பொக்லின் இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளின் போது பெரம்பலூர் நகர மைப்பு ஆய்வாளர் மாணிக் கசெல்வம், கிராம நிர்வாக அலுவலர், சுகாதார அலுவ லர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் நிலஅளவையர் உடன்இருந்தனர்.இந்த ஆக் கிரப்பு அகற்றும் பணி பெரம்பலூர் நகராட்சியில் இரண்டாவது நாளாக இன் றும் (13ஆம் தேதி) சனிக் கிழமையும் நடைபெற உள் ளது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் நகராட்சி வார்டு எண் 5ல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி appeared first on Dinakaran.

Tags : Perambalur Municipal Ward No. 5 ,Perambalur ,Ward No. ,District ,Collector ,Karpagam ,Municipal Chairperson ,Ambika Rajendran ,Peramba… ,Dinakaran ,
× RELATED எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு