×
Saravana Stores

கொளக்காநத்தம் கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து 8 செம்மறி ஆடுகள் பலி

 

பாடாலூர், ஜூலை13: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் பகுதியில் தரையில் அறுந்து விழுந்த மின்கம்பியை கடந்து சென்ற 8 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் கண்ணன் (45). இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் சுற்றியுள்ள கிராமங்களில் இவருக்கு சொந்தமாக சுமார் 200 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கொளக்காநத்தம் கிராமத்தில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆடுகளை அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் புண்ணியமூர்த்தி வயலுக்கு விரைவாக ஆடுகளை ஓட்டிச் சென்றார். அந்த வேளையில் பச்சையம்மன் காட்டு கோயில் அருகே மின்கம்பி அறுந்து தரையில் விழுந்து கிடந்தது. அவ்வழியாக ஆடுகள் ஒன்றும் பின் ஒன்றாகச் சென்றபோது மின்சாரம் தாக்கி 8 செம்மறி ஆடுகளும் நிகழ்விடத்திலே இறந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் மருவத்தூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

The post கொளக்காநத்தம் கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து 8 செம்மறி ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Kolakkanantham village ,Padalur ,Kolakkanatham ,Aladhur taluka ,Perambalur district ,Karupusamy ,Selvanayakpuram ,Muthukulathur taluka, ,Ramanathapuram district ,Kolakkanatham village ,Dinakaran ,
× RELATED பாடாலூர் வட்டார வள மையத்தில்...