×
Saravana Stores

25 கிராம ஊராட்சிகளில் தரிசு நிலத்தில் சாகுபடி திட்டம்

 

பெரம்பலூர்: தமிழக முதல்வரின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது. தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 25 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் வட்டாரத்தில் புதுநடுவலூர், நொச்சியம், அய்யலூர் மற்றும் அம்மாபாளையம் கிராம பஞ்சாயத்துக்களிலும், ஆலத்தூர் வட்டாரத்தில் மேலமாத்தூர், கூடலூர், தேனூர், அருணகிரிமங்கலம், ஜமீன்ஆத்தூர், ராமலிங்கபுரம், செட்டிகுளம் மற்றும் கொளக்காநத்தம் கிராம பஞ்சாயத்துக்களிலும், வேப்பூர் வட்டாரத்தில் வசிஷ்டபுரம், பேரளி, காடூர், கீழபெரம்பலூர், பெண்ணகோனம், ஒகளுர் மற்றும் சித்தளி கிராம பஞ்சாயத்துக்களிலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் நூத்தப்பூர், மேட்டுப்பாளையம், வெங்கலம், அனுக்கூர், நெய்க்குப்பை மற்றும் பில்லாங்குளம் கிராம பஞ்சாயத்துக்களிலும் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

The post 25 கிராம ஊராட்சிகளில் தரிசு நிலத்தில் சாகுபடி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED பெரம்பலூரில் ரூ.346 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு