×
Saravana Stores

புளூ டிக் குறியீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை: டிவிட்டர் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

லண்டன்: டிவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் டிஜிட்டல் விதிகளின் கீழ் ஏமாற்றும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உலக பணக்காரர் ஆன எலான் மஸ்க் கடந்த 2022ல் டிவிட்டரை வாங்கினார். அதன் பிறகு டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 8 டாலர் கட்டணம் செலுத்தினால் அடையாளத்தை சரிபார்த்து சான்றளிக்கும் புளூ டிக் வசதி பயனர்களுக்கு அளிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் டிவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையில் டிவிட்டரின் புளூ டிக் குறியீடுகள் ஏமாற்றும் விதமாகவும், வெளிப்படைத்தன்மையற்றதாகவும் உள்ளது என கூறி உள்ளது.

The post புளூ டிக் குறியீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை: டிவிட்டர் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : European Union ,Twitter ,LONDON ,Elon Musk ,Twitter… ,
× RELATED லெபனானில் இஸ்ரேல் நடத்திய...