×
Saravana Stores

சீனாவின் ஹைபர்போலா-1 ராக்கெட் சோதனை தோல்வி

பெய்ஜிங்: சீனாவின் ஹைபர்போலா 1 ராக்கெட் பரிசோதனை தோல்வியடைந்தது. சீனாவின் ஸ்பேஸ் பயோநீர் என்ற தனியார் நிறுவனம் கடந்த வாரம் விண்வெளி ராக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக விண்ணில் பாய்ந்த ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியது. இந்நிலையில் சீனாவின் ஐஸ்பேஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஹைபர்போலா1 ராக்கெட் சோதனையும் தோல்வியடைந்துள்ளது.

கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து ஹைபர்போலா 1 ராக்கெட் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகள் எதிர்பார்த்தபடி செயல்பட்டது. ஆனால் ராக்கெட்டின் நான்காவது நிலை செயல்பாடு தோல்வியில் முடிந்தது. விண்வெளி ராக்கெட் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் விரிவான ஆய்வுகளுக்கு பின் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post சீனாவின் ஹைபர்போலா-1 ராக்கெட் சோதனை தோல்வி appeared first on Dinakaran.

Tags : Beijing ,China ,Space BioNair ,Dinakaran ,
× RELATED சீனாவின் சர்வதேச திட்டத்தில் சேர பிரேசில் மறுப்பு