×
Saravana Stores

மதுரை தனியார் மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் கொலை

மதுரை: மதுரை தனியார் மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் ஒத்தக்கடையைச் சேர்ந்த முத்துலட்சுமி (75) என்பவர் பணியாற்றினார். அவருடன், முத்துலட்சுமியின் உறவினர்கள் பலரும் பணியாற்றியுள்ளனர். தினசரி காலையில் வேலைக்கு வரும் முத்துலட்சுமி, மாலை வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது மகன் திருப்பதி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, மருத்துவமனை வளாகத்தின் 6வது மாடியில் முகத்தில் காயங்களுடன், முத்துலட்சுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த திருப்பதி, அங்கிருந்த மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

முத்துலட்சுமியின் நகைகளும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, மாட்டுத்தாவணி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முத்துலட்சுமியின் நகைக்காக அவரை, முகத்தை மூடி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க, மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடக்கிறது.

The post மதுரை தனியார் மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Muthulakshmi ,Othakadai ,Mattuthavani ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!