×
Saravana Stores

முட்டுவதுபோல் வந்ததால் மாட்டை கண்டு பயந்து ஓடிய மாணவி பைக்கில் மோதி பலி: கோவையில் பரிதாபம்

கோவை: கோவையில் மாட்டை கண்டு பயந்து ஓடிய மாணவி பைக்கில் மோதி பலியானார். கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் ஜனனி (18). இவர் கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர், கல்லூரி முடிந்தபின்பு பேருந்து மூலம் வீட்டிற்கு செல்ல ஜனனி கோவைப்புதூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு சுற்றித்திருந்த ஒரு மாடு ஜனனியை முட்டுவதுபோல வந்துள்ளது. இதனை கண்டு பயந்துபோன ஜனனி அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது எதிர்புறமாக வந்த இரு சக்கர வாகனமும், ஜனனியும் மோதிக்கொண்டனர. இதில் ஜனனி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஜனனியை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜனனிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜனனி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜனனியை பரிசோதித்த மருத்துவர்கள் ஜனனி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவை கோவைப்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முட்டுவதுபோல் வந்ததால் மாட்டை கண்டு பயந்து ஓடிய மாணவி பைக்கில் மோதி பலி: கோவையில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Siva ,Chettipalayam ,Janani ,B.Com ,
× RELATED தேவயானி நடிக்கும் நிழற்குடை