சென்னை: மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி Lake view road-ல் இருந்து வலதுபுறம் திரும்ப வேண்டும். ராஜேந்திரன் நகர் சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் பிரதான சாலை வழியாக செல்லலாம். மடிப்பாக்கத்திலிருந்து சபரி சாலை வழியாக வலதுபுறம் திரும்பி Lake view road ல் இருந்து வலதுபுறம் திரும்ப வேண்டும். ராஜேந்திரன் நகர் சாலையில் இருந்து இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் சாலை வழியாக கீழ்க்கட்டளை செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்! appeared first on Dinakaran.