×
Saravana Stores

தாம்பரம் அருகே முடிச்சூர் பிரதான் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து!

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலை பார்வதி நகர் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் கோகுல் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென இன்று பிற்பகல் கடையிலிருந்து புகை வர ஆரம்பித்தது. இதை பார்த்த கடையில் பணிபுரிந்த நபர் அங்கிருந்து வெளியேறியே சிறிது நேரத்தில் புகை அதிக அளவில் பரவி தீப்பற்றி மள மள வென எரிய தொடங்கியது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் கடை ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஹார்டுவேர்ஸ் கடையில் பெயிண்ட் டப்பாக்கள், பைப் வகைகள் என பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக இருப்பதால் தீ மல மல வென எரிந்தது. அணைக்க முயன்றும் முடியாததால் அடுத்தடுத்த கடைகளிலும் தீ பரவியது.

பின்பு இரண்டு வாகனங்களில் வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கப்பக்கம் உள்ள கடைகளுக்கு தீப்பருவாமல் தடுக்கப்பட்டது, இதனால் தாம்பரம், முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து பீர்க்கங்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தாம்பரம் அருகே முடிச்சூர் பிரதான் சாலையில் ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : fire ,Nodachur Pradhan Road ,Tambaram ,Chennai ,Ramachandran ,Gokul Hardware store ,Parvati Nagar ,Nodachur Main Road ,Thambaram, Chennai ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் தீயணைப்பு நிலையம்...