- தேவன்
- விஜயபிரபாகரன்
- விருதுநகர்
- DMD
- விஜய பிரபாகரன்
- 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்
- ஜனநாயகக் கட்சி
- தொகுதியில்
- தின மலர்
விருதுநகர்: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தனது தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் என்றார். நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் முதன் முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் 4,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், விருதுநகரில் நேற்றைய தினம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு விஜயபிரபாகரன் நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர்; சூழ்ச்சி, துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டதால் கோபமும், ஆதங்கமும் தங்களுக்குள் உள்ளது என்றார். மேலும், தன்னுடைய தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் என்றவர் தன்னுடைய தோல்வியை 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சரமாக பார்ப்பதாக கூறினார்.
The post எனது தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தெரியும்: ஒரு மாதத்திற்கு பிறகு விருதுநகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த விஜயபிரபாகரன் appeared first on Dinakaran.