திருச்சி, ஜூலை 12:திருச்சியில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைக்குள்ளான விவாதமாக மாறியது. இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் அண்ணாமலைக்கு எழுந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்தில் நேற்று மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில், மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து எரிக்கப்பட்டது.
The post திருச்சியில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.