×
Saravana Stores

மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜூலை 12: திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பநல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கிய ேபரணிக்கு குடும்ப நலத்துறை துணை இயக்குனர் சுபிலா தலைமை வகித்தார். பேரணியை கொடியசைத்து நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன் துவக்கி வைத்தார். ள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய பேருந்து நிலையம், மிளகுபாறை வழியாக கிஆபெ அரசு மருத்துவக்கல்லூரி வரை பேரணி சென்று நிறைவடைந்தது.

அரசு மருத்துவமனை முதல்வர் (பொ) அர்ஷியா பேகம், மருத்துவமனை திட்ட அலுவலர் காயத்ரி தேவி, மாவட்ட காசநோய் அலுவலர் சாவித்திரி, அரசு மருத்துவமனை துறை தலைவர் உமா மோகன்ராஜ், கலைக்காவிரி நுண்கலை கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை குடும்ப நலத்துறை மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் (பொ) நிக்கோலஸ் ராஜா செய்திருந்தார்.

The post மக்கள்தொகை தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Population Day Awareness Rally ,Trichy ,World Population Day ,Ministry of Health and People's Welfare ,Family Welfare Secretariat ,Subila ,Deputy Director ,Family Welfare ,Dinakaran ,
× RELATED தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி...