×
Saravana Stores

மழைக்காலம் துவங்குவதற்கு முன் சாலைகள் புதிதாக அமைக்கப்படும்

திருச்சி. ஜூலை 12: திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் தொடர்பாக மண்டலம் 3 மற்றும் 4ல் உள்ள வார்டு பகுதிகளில் மேயர் அன்பழகன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 56வது வார்டில் ஆய்வு செய்தபோது மழைக்காலம் துவங்குவதற்கு முன் சாலைகள் புதிதாக அமைக்கப்படும் என்று மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் தெரிவித்தார். ருச்சி மாநகராட்சியில் வாரந்தோறும் திங்கள்கிழமை மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் நேற்று மேயர் மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் களஆய்வு மேற்கொண்டார்.

அதில் மண்டலம் 4 ல் உள்ள 56வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் திருநகர், ஆல்பா காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் சாலைகளை சீர் அமைக்க வேண்டும் என கேட்டிருந்தனர். மேயர் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு புதை வடிகால் பணி நிறைவடைந்த சாலைகளை மழைக்காலத்திற்குள் சாலைகள் புதிதாக போடப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மேலும், 65வது வார்டில் உள்ள வலன் நகர், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஓம் சக்தி கார்டன் குடியிருப்பு நல சங்கம் சார்பில் அனைத்து நகரில் உள்ள இணைப்பு சாலைகளை புதிதாக தார் சாலை அமைத்து தரும்படி கேட்டிருந்தனர். மேயர் நேரில் பார்வையிட்டு விரைவில் ஒப்பந்த புள்ளி கோரி சாலைகளை அமைக்கப்படும் என அப்பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும், தெருவிளக்கு தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அதை உடனடியாக செய்து தருவேன் என்று உறுதி அளித்தார்.

பின்னர், மண்டலம் 3ல் வார்டு 40, 41ல் உள்ள இந்திரா நகர், டி.நகர், ஐ.ஏ.எஸ் நகர் குடியிருப்பு நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்திருந்தார். அப்பகுதிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டு சிறு பாலம் கட்டும் பணி உடனடியாக கட்டப்படும் எனவும், தார்சாலை அமைக்கும் பணியையும் விரைவில் அமைக்கப்படும், மழைநீர் வடிகால் வாய்க்கால் உடனே தூர்வாரப்படும் எனவும் பொதுமக்களிடம் தெரிவித்தனர். ந்த ஆய்வில் மண்டல தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் சண்முகம், சரவணன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், மாமன்ற உறுப்பினர்கள் மஞ்சுளா தேவி, கோவிந்தராஜ் மற்றும் இளநிலை பொறியாளர்கள், குடியிருப்பு நலச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post மழைக்காலம் துவங்குவதற்கு முன் சாலைகள் புதிதாக அமைக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mayor ,Anbazagan ,Trichy Corporation ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்