×
Saravana Stores

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் டையூறான சாலையோர கடைகளை அகற்ற வேண்டும்

முத்துப்பேட்டை, ஜூலை 12: முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் இடையூறான சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என்று முத்துப்பேட்டை வர்த்தகக்கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துப்பேட்டை வர்த்தகக்கழக மாதந்திர செயற்குழு கூட்டம் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர்கள் ராஜாராமன், நெய்னா முகமது, அந்தோணிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிஷோர் வரவு, செலவு வசித்தார். முன்னதாக துணைத்தலைவர் இளையராஜா வரவேற்றார். இதில் வர்த்தகர்களின் பிரச்னைகள் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் முக்கம் பகுதியில் எந்தநேரமும் அதிகளவில் மக்கள் வந்து செல்லும் ஒரு பகுதியாகவும், அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் ஒரு பகுதியாகவும் உள்ளது இப்படி போக்குவரத்து நெருக்கடி மிக்க இந்த பகுதியில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சமீபகாலமாக சாலையோர கடைகள் போட்டு மிகவும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்கும்போது பிரச்னைகள் ஏற்படுகிறது. அதனால் காவல்துறை இதனை சரி செய்யும் வகையில் அப்பகுதியில் தினமும் போடப்படும் சாலையோர கடைகளை அகற்ற வேண்டும்.இதேபோல சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், ஹைதர்அலி, கோவிந்தராஜ், சஹாப்தீன், திருவள்ளுவன், சாமிநாதன், நூருல் அமீன், புண்ணியமூர்த்தி, கலையரசன், ஹகீம், விவேக், இளங்கோ பாலகுமார் உட்பட ஏராளமான வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் பிரசாத் நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் டையூறான சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Azadnagar ,Muthuppet ,Muthupet Chamber of Commerce Executive Committee ,Azad Nagar ,Muthupet ,Muthuppet Chamber of Commerce ,President ,Kannan ,Rajaraman, ,Neyna ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி விவசாயி படுகாயம்