- தஞ்சாய் அரண்மனை
- தஞ்சாவூர்
- புத்தகம் திருவிழா
- தஞ்சாவூர் அரண்மனை
- தஞ்சாவூர் புத்தகத் திருவிழா
- மஞ்சவூர் நகராட்சி அரண்மனை வளாகம்
- ஜவூர் மாவட்டம்
- தஞ்சாவூர் நகராட்சி அரண்மனை
- தஞ்சை அரண்மனை வளாகம்
- தின மலர்
தஞ்சாவூர், ஜூலை 12: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவுக்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா ஜூலை 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றனர். ஞ்சாவூரில் 7வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சிக்காக பந்தல் மற்றும் ஸ்டால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதேபோல் குடிநீர், கழிப்பிடம், வாகன நிறுத்தும் இடம் ஒதுக்குவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது.
கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் உணவுத் திருவிழாவிற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 175 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 110 புத்தக அரங்கங்களும், 30 அறிவியல் கண்காட்சி அரங்கமும், 25 உணவு கண்காட்சி அரங்கமும், 10 கோலாரங்கமும் என மொத்தமாக 175 காரணங்கள் அமைய உள்ளது. டந்த ஆண்டு பண்பாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு புதியதாக கோலாரங்கமும் அமைய உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புத்தக கண்காட்சியில் பல புதிய புதிய புத்தகங்களில் வெளியீடுகள் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
இலக்கிய நிகழ்ச்சிகள். அதே வேளையில் பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்கள் விவாதங்கள், ச்சாளர்களின் கருத்துரைகள், புத்தக வாசிப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே எந்த புத்தக கண்காட்சியில் தஞ்சை மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
The post பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத்திருவிழா: அரங்கம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.