- திருமாவளவன்
- பெரம்பலூர்
- பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயற்குழு
- இந்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி
- விஷிகா
- விடுதலைப் புலிகள்
- பெரம்பலூர் மேற்கு மாவட்டம்
- தின மலர்
பெரம்பலூர், ஜூலை 12: விசிக தலைவர் திருமாவளவன் எம்பிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் பெரம்பலூர் பாலக்கரை அருகேயுள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் (மேற்கு) மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார். நகர செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், வேப்பந்தட்டை கிழக்குஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், பெரம் பலூர் கிழக்குஒன்றியசெய லாளர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி துணைச்செயலாளர் மன்னர் மன்னன், பெரம்ப லூர் மாவட்ட துணை செய லாளர் கிருஷ்ணகுமார், மண்டல துணைச் செய லாளர் லெனின், மாநில துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை, தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை பேசினர்.
கூட்டத்தில் வருகிற 15ம் தேதி கட்சித் தலைவர் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளில் பெரம்பலூர் மேற்கு மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவி கள் வழங்குவது, வரும் 15ம் தேதி முன்னால் முதல் வர் காமராசர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பது, படுகொலையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து விசாரணையே இன்றி மரண தண்டனை விதிக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது. தலித் தலைவர்களுக்கும், தலித் செயற் பாட்டாளர்களுக்கும் உய ரிய பாதுகாப்பும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன் எம்பிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் தொண்டமாந்துறை, தொண்டபாடி, வி. களத்தூர் ஊராட்சி தலித் தலைவர்கள் மீது பஞ்சா யத்து ராஜ் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி அதிகாரங்களை பறித்து மிரட்டியதுடன் மேட்டுப் பாளையம் ஊராட்சி தலைவர் அஞ்சலி என்பவருக்கு எதிராக பழிவாங்கும் நோக் கத்தோடு பஞ்சாயத்துராஜ் சட்டம் பிரிவு 205- ன்கீழ் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியதை வன்மை யாக கண்டிப்பது. தலித் தலைவர்களை குறி வைத்து அதிகாரத்தை பறிக்கும் செயலை செய்து வரும் பெரம்பலூர் மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டி த்து வருகிற 18ம்தேதி தேதி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பெர ம்பலூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகர பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.
The post திருமாவளவன் எம்பிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.