×
Saravana Stores

காங்கிரசார் ஆர்ப்பாட்டம் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து

குடியாத்தம், ஜூலை 11: குடியாத்தத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகையை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று பல்ேவறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் விஜயன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜ மற்றும் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, அண்ணாமலை உருவ பொம்மை தீ வைத்து எரித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீசார் உடனே உருவ பொம்மை மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post காங்கிரசார் ஆர்ப்பாட்டம் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து appeared first on Dinakaran.

Tags : Congress ,Annamalai effigy ,Gudiyattam ,Congress party ,BJP ,president ,Annamalai ,MLA ,Selvaperunthakai ,Congress committee ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் நகர காங். தலைவர் தேர்வு