பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு

பாட்னா: பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. கோசி, பாகமதி, கந்தக், கம்லா மற்றும் அதார்வா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியது. சில பகுதிகளில் கோசி ஆறு அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகிறது.

பிகாரில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஜஹனாபாத், கிழக்கு சம்பாரன் உள்பட 6 மாவட்டங்களில் 9 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா். ஜஹனாபாதில் 3 பேரும், மதேபுராவில் 2 பேரும், கிழக்கு சம்பாரன், ரோஹ்தாஸ், சரண் மற்றும் சுபால் ஆகிய மாவட்டங்களில் 4 பேரும் உயிரிழந்தனா்.

மின்னல் தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே பீகாரில் 22 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களில் பீகாரில் 40 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.

பீகார் முதலமைச்சர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஜமுய் மற்றும் கைமூரில் தலா மூன்று இறப்புகளும், ரோஹ்தாசில் இரண்டு இறப்புகளும், சஹர்சா, சரண், போஜ்பூர், கோபால்கஞ்ச் ஆகிய இடங்களில் தலா ஒரு இறப்பும் பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பகுதியில் ஜூலை 9-10 தேதிகளில் மீண்டும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஜெய்பூா், கோட்டா உள்பட 9 மாவட்டங்களில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிகறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் விழிப்புடன் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: