×
Saravana Stores

குரும்பலூர் ஏரிக்கரை அருகே உரிமம் இல்லாத நாட்டுதுப்பாக்கி வைத்திருந்தவர் கைது

பெரம்பலூர், ஜூலை 8: பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்ட்டி கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந் தவர் பெருமாள் மகன் கமலக்கண்ணன்(37). இவர் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் (SBML) பெரம்பலூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட குரும் பலூர் ஏரிக்கரை அருகே வனவிலங்குகளை வேட் டையாடச் சென்றார். அப்போது பெரம்பலூர் வனச்சரகம், அம்மாபாளையம் பிரிவு வானவரான குப்புசாமி மகன் பிரதீப்குமார்(43) என் பவரது தலைமையிலான வனத்துறையினர் கமலக் கண்ணனை கையும் களவு மாகப் பிடித்துபெரம்பலூர் காவல் நிலையத்தில் துப் பாக்கியுடன் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் இன் ஸ்பெக்டர் கருணாகரன் குற்ற எண் 523/24 U/S 25(1-B)(a) Arms Act – 1959 – ன் கீழ் வழக்கு பதிவுசெய்து கம லக் கண்ணனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்.

The post குரும்பலூர் ஏரிக்கரை அருகே உரிமம் இல்லாத நாட்டுதுப்பாக்கி வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kurumbalur lake ,Perambalur ,Kamalakannan ,Perumal ,East Street, Tambranti village, Perambalur district ,Kurumbalur ,
× RELATED எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு