மலேசியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மலேசியா: மலேசியா தலைநகர் கோலாலம்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில், பெண்களுக்கான கோலப் போட்டி, குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, நெருப்பு இல்லாத சமையல் போட்டி, கும்மியாட்டம், கயிறு இழுக்கும் போட்டி, கபடி போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: