×

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்: சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார். பெரு நிறுவனங்களை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று சட்டமன்றத்தில் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் தனது பதிலுரையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். முதல்வர் சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு பயணித்ததன் விளைவாக 10,882 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் தொழில்துறை மூலமாக மட்டுமே 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு தீவிர ஆய்வுக்கு பிறகே எடுக்கப்பட்டது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும் எனவும் பேசியுள்ளார்.

The post தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்: சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,America ,Minister of Legislation ,D. R. B. King ,Chennai ,United States ,Minister ,D. R. B. ,Stalin ,Minister of Labor ,D. R. B Raja ,D. R. B. Raja ,Dinakaran ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...